This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் உடலுறவு: பாதுகாப்பு, ஆபத்துகள் & நிலைகள் (2026)

Written by - Avira ParaiyarLast updated: May 28, 2026
கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் உடலுறவு: பாதுகாப்பு, ஆபத்துகள் & நிலைகள் (2026)
Likes40 Likes|
Read time7 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் உடலுறவு பெரும்பாலான பெண்களுக்கு பாதுகாப்பானது; அம்னோடிக் திரவமும் கர்ப்பப்பை வாயில் உள்ள சளியும் குழந்தையை தொற்றுகளிலிருந்து பாதுகாக்கின்றன.
  • கருச்சிதைவு வரலாறு, இரட்டைக் குழந்தைகள், பிறப்புறுப்பு இரத்தப்போக்கு, தாழ்வான நஞ்சுக்கொடி அல்லது பனிக்குடம் உடைதல் போன்ற சூழ்நிலைகளில் முதல் மூன்று மாதங்களில் உடலுறவை தவிர்க்க வேண்டும்.
  • முதல் காலாண்டில் உடலுறவு உச்சகட்ட இன்பம், சிறந்த தூக்கம், ஆக்ஸிடாஸின் வெளியீடு மற்றும் தம்பதியர் இடையே நெருக்கத்தை அதிகரிக்க உதவுகிறது.
  • கர்ப்ப கால நெருக்கத்திற்கு எது உதவும்? Explore our Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each.
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
Baby Lotion (100 ml) + Baby Soap (75 gm)
Baby Lotion (100 ml) + Baby Soap (75 gm)
Rating4.4
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4

முன்னுரை

உடலுறவு என்பது கணவன் மனைவி இடையே உள்ள ஒரு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான செயல்பாடாகும். பொதுவாக ஒரு தம்பதி குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், அவர்கள் உடல் ரீதியாக நெருக்கமாக இருக்க வேண்டும். பின்னர் உடலுறவில் ஈடுபட வேண்டும். ஆனால்,q கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்வது சரியா?

நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது கர்ப்பமாக இருக்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு இந்த கேள்வி கண்டிப்பாக எழும் - கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் உடலுறவு கொள்வது சரியா? பெரும்பாலான பெண்களுக்கு, பதில் ஆம் என்பதாக இருக்கும். நீங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் கர்ப்பமாக இருக்கும் வரை முதல் மூன்று மாதங்களிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது மூம்மாதங்களிலும் உடலுறவில் ஈடுபடலாம். அதாவது, உங்கள் பனிக்குடம் உடையாத வரை கவலையில்லை. இருப்பினும், உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது.

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இன்றைய இளைஞர்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா என்பது பற்றிய கேள்விகளை மருத்துவரிடம் கேட்கத் தயங்குகிறார்கள். கரு அதிக ஆபத்தில் இருந்தாலோ அல்லது உங்கள் மருத்துவர் வேறு விதமாக ஆலோசனை வழங்காத வரையிலோ, கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது என்பது பாதுகாப்பானது தான். உடலுறவு உங்களையோ உங்கள் குழந்தையையோ பாதிக்காது. உடலுறவின் போது கர்ப்பப்பையில் உள்ள அம்னோடிக் திரவம் குழந்தையைப் பாதுகாக்கும். மேலும், சளி போன்ற திரவம் குழந்தையைப் பாதுகாக்கிறது. மேலும், இது உங்கள் கர்ப்பப்பை வாயை மூடி, தொற்றுநோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா?

  • கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் அல்லது 90 நாட்கள் மிகவும் முக்கியமானது என்பதால், இந்த நேரத்தில் உடலுறவு கொள்வது போதுமான அளவு பாதுகாப்பானதா என்பதை அறிந்து கொள்வது அவசியம். பெரும்பாலும் முதல் முறையாக கர்ப்பம் தரித்த பெண்கள் இதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஏனெனில், பொதுவாக முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் அறிகுறிகள் அவர்களுக்கு புதிதாக இருக்கும். அவர்கள் அடிக்கடி மிகவும் சோர்வாக உணர்வார்கள். குமட்டல் உணர்வும் இயல்பாகவே இருக்கும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் மார்னிங் சிக்ன்ஸ் இருக்கும். ஆம், நான்கில் மூன்று பங்குக்கும் அதிகமான பெண்கள் காலை சுகவீனத்தால் பாதிக்கப்படுகின்றனர். இது கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன் எச்சிஜி (hCg) எதிர்வினை காரணமாக நடக்கிறது.

  • எனவே, கர்ப்பத்தின் முதல் சில வாரங்களில் நீங்கள் சோர்வாக உணர்ந்து உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருக்கலாம். அப்போது நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் சோர்வில் இருந்து மீண்டு நன்றாக உணர ஆரம்பித்தவுடன் (காலை நேர உடல் சோர்வு 12 முதல் 14ஆவது வாரத்திற்குள் முடிந்துவிடும்) அல்லது உங்கள் பார்ட்னருடன் உடலுறவில் ஈடுபடும் ஆசையை மீண்டும் தூண்டி, அதன் பின்னர் உடலுறவில் ஈடுபடலாம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், உங்கள் கர்ப்ப காலம் முழுவதும், அதுவும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானது தான்.

கர்ப்ப காலத்தில் உடலுறவு என்பது எப்போது பாதுகாப்பற்றதாகிறது?

அதிக ஆபத்துள்ள கர்ப்பம் என்று உங்கள் மருத்துவர் உங்களை எச்சரிக்காத வரை கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானது தான்.

சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கர்ப்பத்தின் முதல் மாதத்திலும் கர்ப்ப காலம் முழுவதும் கூட உடலுறவு கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். அந்த சூழ்நிலைகள் பின்வருமாறு –

  • உங்களுக்கு கருச்சிதைவு இதற்கு முன் ஏற்பட்டிருந்தால்

  • நீங்கள் இரட்டைக் குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கும் பட்சத்தில்

  • உங்களுக்கு ஏற்கனவே குறைப்பிரசவம் நடந்திருந்தால்

  • இந்த கர்ப்ப காலத்தில் குறைப்பிரசவத்தின் அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கும் போது

  • நீங்கள் பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு அல்லது அதிகப்படியான வெளியேற்றத்தை அனுபவித்தால்

  • கர்ப்பப்பைவாய் திறப்பதில் பிரச்சனை, நஞ்சுக்கொடி குழந்தையின் கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டிருத்தல் அல்லது ஒரு தாழ்வான நஞ்சுக்கொடி ஆகியவற்றை மருத்துவர் கண்டறிந்தால்

  • பனிக்குடம் உடைந்திருந்தால்

  • ஏதேனும் பால்வினை நோய்கள் உங்களுக்கோ அல்லது உங்கள் பார்ட்னருக்கோ இருந்தால்

தயவுசெய்து கவனிக்கவும்:கர்ப்பத்தின் முதல் மாதத்தில் உடலுறவு கொள்வது குறித்தும் நாம் விவாதிக்கும்போது , நாம் வெஜைனல் செக்ஸ் பற்றி மட்டுமே பேசுகிறோம். கர்ப்ப காலத்தில் ஆசனவாய் வழி உடலுறவு கொள்வது பரிந்துரைக்கப்படுவதில்லை.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

முதல் மூன்று மாதங்களில் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி ஆராய்வோம் வாருங்கள்-

முதல் மூன்று மாதங்களில் உடலுறவு வேடிக்கையாக செய்தாலும், அதனால், உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்கும். அவை பின்வறுமாறு:

  • அதிகரித்த உணர்திறன்

சினைப்பையில் அதிகரித்த இரத்த ஓட்டம் இருப்பதன் காரணமாக கருத்தரித்த முதல் மூன்று மாதங்களில் உடலுறவில் ஈடுபடுதல் முன்னெப்போதையும் விட சிறப்பானதாக இருக்கும்.

  • சுறுசுறுப்பாக இருக்கலாம்

உடலுறவில் ஈடுபடுவதால் உங்கள் உடலில் கலோரிகள் எரிக்கப்படுகிறது. இது நீங்கள் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கவும், குறிப்பிட்ட நேரத்தில் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.

  • உச்சகட்ட இன்பம்

கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதை நீங்கள் உணர முடியும் என்பதால், இந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் நீங்கள் உச்சக்கட்டத்தை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  • சிறந்த தூக்கம்

கர்ப்ப காலத்தில் உறக்கம் என்பது சரியாக நமக்கு கிடைக்காது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் உடலுறவு காரணமாக உங்களுக்கும் உங்கள் துணைக்கும் சிறந்த தூக்கம் வர வாய்ப்புள்ளது.

  • அதிக நல்ல உணர்வைத் தூண்டும் நல்ல ஹார்மோன்கள்

உச்சக்கட்டத்தின் போது ஆக்ஸிடாஸின் வெளியிடப்படும் என்பதால், உடலுறவுக்குப் பிறகு நீங்கள் அமைதியாகவும் மென்மையாகவும் உணரலாம். இதன் விளைவாக, நீங்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உணர முடியும்.

கர்ப்பமாகி முதல் மூன்று மாதங்களில் உடலுறவில் ஈடுபடுவதற்கான டிப்ஸ்கள்

கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் பாலியல் திருப்திக்கான சில நடைமுறை பரிந்துரைகள் இங்கே:

செக்ஸுவல் பொசிஷனிங்

பாலியல் உணர்வு ஏற்படுவது நபருக்கு நபர் மாறுபடலாம். சிலர் கர்ப்ப காலத்தில் இதை மிகவும் சுவாரஸ்யமாகக் கண்டாலும், மற்றவர்கள் கர்ப்ப காலத்தில் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களால் அசெளகரியமாக உணர்கிறார்கள். கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் உடலுறவில் ஈடுபட நிலையான பொசிஷன் பின்வருமாறு-

  • ஒரு பக்கம் கர்ப்பிணியை படுக்க வைத்து தான் உடலுறவில் பார்ட்னர் ஈடுபட வேண்டும்

  • உடலுறவு கொள்ளும் பெண் மேலே இருக்கலாம்

  • தனது பார்ட்னரின் மடியில் அமர்ந்திருக்கலாம்

  • கைகளை முன்பக்கம் ஊன்றி கால் முட்டிகளையும் ஊன்றிய பொசிஷனல் இருக்கலாம்

லூப்ரிகேஷன்

  • லூப்ரிகேட் கொண்ட ஆணுறை

  • நீரில் கரையக்கூடிய லூப்ரிகன்ட் ஜெல்லி

  • பேபி ஆயில் அல்லது வாஸ்லினை தவிர்க்கவும்

இதையும் படிக்கலாமே! - சிசேரியனுக்குப் பிறகு எப்போது உடலுறவு கொள்ள வேண்டும்?

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதற்கான மாற்று வழிகள்

நேசிப்பதற்கும் நேசிக்கப்படுவதற்கும் உடலுறவு கொள்வது என்பது எப்போதும் அவசியமில்லை. உங்கள் கர்ப்ப காலத்தில் நெருக்கத்தைத் தேட இந்த மாற்று வழிகளையும் நீங்கள் முயற்சி செய்யலாம்.

  • அரவணைத்தல்

  • முத்தம் கொடுத்தல்

  • பாடி மசாஜ் செய்தல்

  • வாய்வழி பாலுறவு

  • பரஸ்பர சுயஇன்பம்

முடிவுரை

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், உங்கள் மருத்துவர் வேண்டாம் என்று அறிவுறுத்தினாலே தவிர, நீங்கள் கர்ப்பமான பிறகு முதல் வாரத்தில் அல்லது முதல் 2 மாதங்கள் வரை உடலுறவில் ஈடுபடலாம். உங்கள் உடலையும் மனதையும் நன்றாக கவனித்து, அதற்கேற்ப சில மாற்றங்களை உங்களுக்கு நீங்களே செய்து கொண்டு நன்றாக உணருங்கள்.

FAQs

கர்ப்பத்தின் முதல் மாதத்தில் உடலுறவு பாதுகாப்பானதா?

சாதாரணமாக பாதுகாப்பானது — கர்ப்பம் சாதாரணமாக இருந்தால். இரத்தப்போக்கு, வலி, அல்லது கருச்சிதைவு வரலாறு இருந்தால் மருத்துவரை அணுகவும்.

முதல் 3 மாதங்களில் உடலுறவு கருச்சிதைவை ஏற்படுத்துமா?

சாதாரண கர்ப்பத்தில் உடலுறவு கருச்சிதைவை ஏற்படுத்தாது. ஆனால் அதிக ஆபத்துள்ள கர்ப்பத்தில் மருத்துவர் ஓய்வை பரிந்துரைக்கலாம்.

முதல் காலாண்டில் எந்த நிலை மிகவும் வசதியானது?

Spooning, Side-by-side மற்றும் Woman-on-top நிலைகள் முதல் காலாண்டில் மிகவும் வசதியானது — வயிற்றில் அழுத்தம் இல்லை.

உடலுறவுக்குப் பிறகு லேசான இரத்தப்போக்கு இருந்தால்?

லேசான spotting சில நேரங்களில் இயல்பானது, ஆனால் உடனே மருத்துவரை அணுகவும் — குறிப்பாக வலி, கடுமையான இரத்தப்போக்கு அல்லது பிடிப்பு இருந்தால்.

முதல் காலாண்டு அன்னையரால் நம்பப்படுகிறது

உங்கள் உடல் மாறும் இந்த நேரத்தில் வசதி, பாதுகாப்பு மற்றும் மென்மையான பராமரிப்பை வழங்கும் தயாரிப்புகள் உங்கள் பயணத்தை எளிதாக்கும்.

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2006 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

419 Moms bought
₹999₹154535% Off
Rating
3.9
()
Baby Lotion (100 ml) + Baby Soap (75 gm)

Baby Lotion (100 ml) + Baby Soap (75 gm)

Made Safe Australia Certified | Dermatologically Tested | Long Lasting 24 Hours Moisturization| Soothes Dryness

2677 Moms bought
₹199₹24418% Off
Rating
4.4
(15)
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4133 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(45)

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.